×

வேதாரண்யத்தில் கந்து வட்டி கொடுமைக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் வணிகர்சங்க செயற்குழு வலியுறுத்தல்

வேதாரண்யம், ஜன.27: வேதாரண்யத்தில் வணிகர்களை பாதிக்கும் கந்துவட்டி கொடுமைக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகர் சங்க செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேதாரண்யத்தில் வணிகர் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தலைவர் திருமலை செந்தில் தலைமை வகித்தார் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வேதை.முருகையன்,வேதாரண்யம் சங்க செயலாளர் முரளி, பொருளாளர் அய்யாத்துரை, பொதுச்செயலாளர் கவிபாரதி இணைச் செயலாளர் சிவகுமார், ஆனந்தகிருஷ்ணன்,சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் பாரி, விவசாய சங்கத்தை சேர்ந்த பார்த்தசாரதி, ஆயக்காரன்புலம் சங்கத் தலைவர் மதியரசு, மற்றும் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், வேதாரண்யத்தில் நுகர்வோர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த ஏதுவான இடத்தை ஒதுக்கித் தரவேண்டும். ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அனுமதிக்கக்கூடாது. வணிகர்களை பாதிக்கச் செய்யும் வகையில் நிதி நிறுவனங்கள் அதிக வட்டி பெறுவதை தடுத்து நிறுத்த வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். அகஸ்தியன்பள்ளி-திருத்துறைப்பூண்டி அகல ரயில்பாதை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட பிரதிநிதி சண்முகம் நன்றி கூறினார்.

Tags : Commerce ,executive committee ,government ,
× RELATED திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: காணொலியில் நடந்தது