×

உள் இடஒதுக்கீடு கேட்டு சீர்மரபினர் நலச்சங்கத்தினர் மனு

தேனி, ஜன. 28: மத்திய அரசு டிஎன்டி பிரிவினருக்கு ஓபிசி உள்இடஒதுக்கீடு வழங்குவதில் காலதாமதப்படுத்தாமல் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென சீர்மரபினர் நலச்சங்கத்தினர் தேனி மாவட்ட கலெக்டரிடம் கேரிக்கை மனு அளித்தனர்.
சீர்மரபினர் நலச்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து, கலெக்டர் பல்லவி பல்தேவிடம் கோரிக்கை மனு அளித்தனர். இம்மனுவில், பழங்குடியினராக உள்ள சீர்மரபினத்தை சேர்ந்தவர்களை ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் குற்றப்பரம்பரைகளாக கருதி டிஎன்சி சாதி சான்றிதழ் வழங்கினர். இதனால் மத்திய அரசு பணிக்கு செல்வதில் இச்சமூகத்தினர் பாதிக்கப்பட்டனர். எனவே டிஎன்சியை டிஎன்டியாக அறிவித்து மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் ஓபிசி உள்இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைத்து ஓபிசி இடஒதுக்கீட்டில் உட்பிரிவு செய்து டிஎன்டி மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க உறுதிஅளித்தது. ஆனால், இடஒதுக்கீடு வழங்குவதை நடைமுறைப்படுத்துவதில் அரசு காலதாமதப்படுத்தி வருகிறது. எனவே, மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் டிஎன்டி மக்களுக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்பில் ஓபிசி இடஒதுக்கீட்டில் உட்பிரிவு செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : Petitioners ,
× RELATED அரியலூர் எஸ்.பி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்