×

தேனி கடைகளில் 200 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல்

தேனி, ஜன. 28:  தேனியில் கடைகளில் 200 கிலோ பாலித்தீன் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தேனியில் டாஸ்மாக் கடை, பலசரக்கு கடை, இறைச்சி கடைகளில் பாலித்தீன் பைகள் பயன்படுத்துவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. கமிஷனர் நாகராஜ், பொறியாளர் சுரேஷ்குமார், சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம், ஆய்வாளர்கள் மாரிமுத்து, பாலமுருகன், தர்மராஜ், சுருளியப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தனர். இதில் டாஸ்மாக் கடைகளுக்கு சப்ளை செய்ய வைத்திருந்த தடை செய்யப்பட்ட பாலித்தீன் தட்டுகள், டம்ளர்கள், பைகள் உட்பட ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 200 கிலோ பாலித்தீன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடை உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த கடையில் தற்போது இரண்டாவது முறையாக பாலித்தீன் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீண்டும் சிக்கினால் இவரை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுப்போம் என எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி உள்ளோம்’ என்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 16 இடங்களில் ரெய்டு நடத்திய அதிகாரிகள் 200 கிலோவிற்கு மேல் பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்து அழித்தனர். நகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து கடும் ரெய்டு நடத்தினாலும், தடை செய்யப்பட்ட பாலித்தீன் பயன்பாடு இருப்பது, அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தினமும் ரெய்டு நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Tags :
× RELATED அவசர தேவைக்காக சென்னையில் 200 மாநகர பேருந்துகள் இயக்கப்படும்