×

மானாமதுரையில் பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தினவிழா மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சி

மானாமதுரை, ஜன.28: மானாமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகள், நகரில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் சேவியர் ஆரோக்கியதாஸ் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர் ராதாசிவச்சந்திரன் தேசிய கொடியை ஏற்றினார். தமிழாசிரியர் சுந்தர்ராஜன் நன்றி கூறினார். கல்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் சாந்தி தலைமை தாங்கினார். கல்குறிச்சி ஊராட்சி மன்றத்தலைவர் யாஸ்மின் சஞ்சய் தேசியக்கொடியை ஏற்றினார். ஆசிரியர் கண்ணதாசன் நன்றி கூறினார். சூரக்குளம் அரசுபள்ளியில் சூரக்குளம் பில்லறுத்தான் ஊராட்சிதலைவர் ராஜாத்திபெரியசாமி கொடியேற்றி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். உதவி ஆசிரியர் மகேந்திரன், வார்டு உறுப்பினர் முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தெ.புதுக்கோட்டை எம்.கே.என் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் பள்ளி தாளாளர் அன்பழகன் தலைமையில் நடந்த விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலெட்சுமி ராமச்சந்திரன் கொடி ஏற்றி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் மஞ்சுகுமாரி சிவபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை தெய்வானை நன்றி கூறினார். மேலநெட்டூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா ராஜ்குமார் தேசிய கொடி ஏற்றி வைத்தார். தலைமை ஆசிரியர் முத்துப்பாண்டி வரவேற்றார். கணிதஆசிரியர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார். மானாமதுரை குட்வில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் பூமிநாதன் கொடி ஏற்றினார்.
ஜெயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் கிறிஸ்டிராஜ், முதல்வர் ஜெஸிகிறிஸ்டி, நிர்வாகிகள் சாலமன், பெட்சி, மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பாபா மெட்ரிக் பள்ளியில் தாளாளர் ராஜேஸ்வரி தேசிய கொடி ஏற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். விழாவில் தாளாளர் கபிலன், முதல்வர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மானாமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் குமரேசன் கொடி ஏற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். விழாவில் சுகாதார ஆய்வாளர் தங்கதுரை, மேற்பார்வையாளர் பாலு, அலுவலக பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியதலைவர் லதா அண்ணாத்துரை கொடி ஏற்றி வைத்தார். துணைத்தலைவர் முத்துச்சாமி, பி.டி.ஓ,க்கள் சுந்தரமகாலிங்கம், அழகுமீனாள், மேலாளர் ரமேஷ் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மானாமதுரை அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் ஜீவரத்தினம் கொடி ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். விழாவில் டாக்டர்கள், செவிலியர்கள், நோயாளிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Republic Day Festival ,Colleges ,Manamadurai School ,
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...