×

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் முன்னாள் அமைச்சர் பேச்சு

காரைக்குடி, ஜன. 28: வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும் என முன்னாள் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ தெரிவித்தார்.
காரைக்குடியில் நகர திமுக மற்றும் மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார் வரவேற்றார். நகர செயலாளர் குணசேகரன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ சுப.துரைராசு, முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனிசெந்தில்குமார், முன்னாள் நகரசெயலாளர் துரைகணேசன், அவைத்தலைவர் இராகோஅரசு உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ துவக்கிவைத்து பேசுகையில், நமது தாய் மொழியை காக்க உயிர் தியாகம் செய்தவர்களை பொற்றும்வகையில் வீரவணக்க நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. கீழடியில் தமிழர்களின் பெருமையை விளக்கும் பல்வேறு ஆவணங்கள் கிடைத்துள்ளன. ஆனால் இதனை வெளிக்கொண்டுவராமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு இடையூறுகளை செய்துவருகிறது. மத்திய அரசுக்கு அஞ்சி நடக்கும் தமிழக அரசும் இதனை எதிர்த்து குரல் கொடுக்கமுடியாமல் உள்ளது வெட்ககேடானது. தமிழக மக்களின் ஆதரவு எப்போதும் திமுகவுக்கு உண்டு என்பது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மக்கள் காண்பித்துள்ளனர்.
உள்ளாட்சி தேர்தலை பொருத்தவரை எப்போதும் ஆளும்கட்சியே 100 சதவீத வெற்றி பெறும். ஆனால் இந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி 60 சதவீத வெற்றி பெற்றுள்ளது.

தேர்தல் முறையாக நடந்து இருந்தால் நிச்சயம் 80 சதவீத வெற்றி பெற்று இருப்போம். சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் திமுக கூட்டணி 100 சதவீத வெற்றி பெறும் என்பது உறுதி. தமிழக அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒருமாதிரி பேசுகின்றனர். நமது மாவட்ட அமைச்சர்கள் மேடையில் ஒருமாதிரியும், கீழே ஒருமாதிரியும் இஷ்டத்துக்கு பேசுகின்றனர். கொள்கை இல்லாதவர்கள். அமைச்சர்கள் என்பவர்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள். எனவே பண்புடன், நா அடக்கத்துடன் பேச வேண்டும் என்றார். தலைமைகழக பேச்சாளர் தூத்துக்குடி சரத்பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர மாணவரணி அமைப்பாளர் அசரப் நன்றி கூறினார்.

Tags : minister talks ,DMK ,assembly election ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு