×

சிங்கம்புணரியில் கொசுக்கடியால் அவதிப்படும் மக்கள்

சிங்கம்புணரி, ஜன.28: சிங்கம்புணரி நகரில் காசியாபிள்ளை நகர், வேட்டையன் பட்டி, அருண் அரணத்தாங் குண்டு, கூத்தாடி அம்மன் கோவில் தெரு, வீரமுத்தி அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் கழிவுநீர் கால்வாய்கள் இல்லை. இதனால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் நாடார்பேட்டை பகுதியில் உள்ள பள்ளங் குண்டு ஊரணியில் கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் கொசுக்கடியால் மக்கள் தூக்கத்தை இழந்து அவதியடைந்து வருகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் வாரத்தில் சில நாட்கள் காலை நேரங்களில் மட்டும் இருச்சக்கர வாகனங்களில் சாலைகளில் மட்டும் கொசு மருந்து அடிக்கின்றனர். சிறு வீதி குடியிருப்பு பகுதிகளில் கொசு மருந்து அடிப்பது இல்லை. இதனால் மக்களுக்கு எவ்வித பயனுமில்லை. எனவே மாலை நேரத்தில் குடியிருப்பு பகுதிகளில் கொசு மருந்து அடிக்கவும், கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Singapore ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...