×

வேடசந்தூர் அருகே டூவீலர் மீது வேன் மோதி 2 பேர் படுகாயம்

வேடசந்தூர், ஜன. 28: வேடசந்தூர் அருகே டூவிலர் மீது வேன் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர். குஜிலியம்பாறையை சேர்ந்தவர் பெரியசாமி (55). இவரது தம்பி மகன் திவாகர் (24). இருவரும் டூவிலரில் தாடிக்கொம்பில் இருந்து டூவீலரில் வேடசந்தூர் வழியாக குஜிலியம்பாறைக்கு கிளம்பினர். டூவீலரை திவாகர் ஓட்டி வந்தார். திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் விருதலைப்பட்டி பகுதியில் வந்தபோது திடீரென டூவீலவரை திவாகர் திருப்ப முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது பின்னால் வந்த வேன் டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் திவாகர், பெரியசாமி ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து வழக்குப்பதிந்த கூம்பூர் போலீசார், வேன் டிரைவர் செல்வகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : van crashes ,Vedasandur ,
× RELATED மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே...