×

பழநி கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

பழநி, ஜன. 28: பழநியில் உள்ள அருள்மிகு பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. இயற்பியல் வளர்ச்சியில் அண்மைக்கால போக்கு எனும் தலைப்பில் நடந்த கருத்தரங்கிற்கு கல்லூரியின் முதல்வர் பிரபாகர் தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் கிருஷ்ணமுர்த்தி முன்னிலை வகித்தார். இயற்பியல் துறை தலைவர் பிரமிளா வரவேற்று பேசினார். மின்னணு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை பேராசிரியர் ராம்குமார், கோவை பிஎஸ்ஜி கல்லூரி மூர்த்தி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இயற்பியல் துறை உதவி பேராசிரியர் பாக்யராஜ் நன்றி கூறினார்.

Tags : Palani College ,
× RELATED பழநியில் 148 அடி நீளத்தில் 540 ஓவியங்கள் -கல்லூரி மாணவி சாதனை