×

குடியரசு தின விழா கொண்டாட்டம்

ஒட்டன்சத்திரம், ஜன. 28: நாடு முழுவதும் 71வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஒட்டன்சத்திரம் நகராட்சியில் நடந்த குடியரசு தின விழாவில் ஆணையாளர் தேவிகா கொடியேற்றி வைத்தார். பின்னர் நகராட்சியில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பரிசுகள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. ஒட்டன்சத்திரம் நகரை பிளாஸ்டிக் இல்லா நகரமாக்குவோம் என உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதில் நகராட்சி பொறியாளர் சாகுல்அமீது, மேலாளர் முருகராஜ், சுகாதார ஆய்வாளர் வீரபாகு, இளநிலை உதவியாளர் ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒட்டன்சத்திரம் தீனிகிட்ஸ் மக்தப் மதரசாவில் மௌலவி ஷாஜகான் பாகவி கொடியேற்றினார். முதல்வர் அமானுல்லா அன்சாமி குடியரசு தினவிழா மாண்புகள் குறித்து எடுத்துரைத்தார். இதில் முஸ்லீம் ஜமாத்தார்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இனிப்புகள் வழங்கப்பட்டது. காளாஞ்சிபட்டி ஊராட்சி துவக்கப்பள்ளியில் நடந்த விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், தலைமையாசிரியர் சதாசிவம், உதவி ஆசிரியை கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இடையகோட்டை முஸ்லீம் ஜமாத் சார்பில் நடந்த விழாவில் பள்ளி இமாம் ஆசிக் இலாஹி கொடியேற்றி மரியாதை செலுத்தினார். இதில் சாகுல்அமீது, அப்துல்கபூர், முகமது இஸ்மாயில், முகமது பாருக், முகமது மீரா மற்றும் ஜமாத்தார்கள், மாணவர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் சரவணன் கொடியேற்ற, துணை வட்டாட்சியர்கள் ராஜேந்திரன், நந்தகோபால் மற்றும் வருவாய்த்துறையினர் பலர் கலந்து கொண்டனர். ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கல்லூரியில் நடந்த விழாவில் தாளாளர் வேம்பணன் தலைமை வகிக்க, ஐஎம்ஏ கிளை செயலாளர் மருத்துவர் ஆசைத்தம்பி கொடியேற்றினார். ஒட்டன்சத்திரம் பட்ஸ் மெட்ரிக் சிபிஎஸ்இ பள்ளியில் நடந்த விழாவிற்கு தாளாளர் கண்ணம்மாள் தலைமை வகிக்க, முதல்வர் பொன்கார்த்திக் கொடியேற்றினார். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். இனிப்புகள் வழங்கப்பட்டது. ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த விழாவில் ஒன்றிய தலைவர் அய்யம்மாள் கொடியேற்ற, துணை தலைவர் காயத்ரிதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒட்டன்சத்திரம் மின்வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளர் மணிமேகலை கொடியேற்ற, உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். *திண்டுக்கல் முருகபவனத்தில் கூட்டுறவு பயிற்சி பள்ளியில் மத்திய கூட்டுறவு சங்க தலைவர் மருதராஜ் கொடியேற்ற, மாவட்ட ஒன்றிய கூட்டுறவு சங்க தலைவர் ராஜ்மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். *கொடைக்கானல் சன் அரிமா சங்கம், 12வது வார்டு பொது நலச்சங்கம் சார்பில் நடந்த விழாவில் சன் அரிமா சங்க பட்டய தலைவர் டாக்டர் ரவீந்திரன் தலைமை வகித்து கொடியேற்றினார். முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஆஷா முன்னிலை வகித்தார். பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. *சாணார்பட்டி யூனியன் அலுவலகத்தில் சேர்மன் பழனியம்மாள் கொடியேற்றினார். காவல்நிலையத்தில் காவலர் இன்னகுமாரசாமி கொடியேற்றினார்.

Tags : Republic Day Celebration ,
× RELATED மாநில இறகுப்பந்து போட்டியில் முதலிடம் தர்மபுரி மாணவருக்கு பாராட்டு