×

வீட்டிற்கு பட்டா வழங்காவிட்டால் வாழ்வை முடித்து கொள்வேன் 96 வயது தியாகியின் குரலிது

திண்டுக்கல், ஜன. 28: வீட்டிற்கு பட்டா வழங்காவிட்டால் விஷம் குடித்து வாழ்வை முடித்து கொள்வேன் எனக்கூறி 96 வயது சுதந்திர போராட்ட தியாகி கலெக்டரிடம் மனு அளித்தார். வேடசந்தூர் தாலுகா, மார்க்கெட் ரோடு பகுதியில் வசிக்கும் சுதந்திர போராட்ட தியாகி கிருஷ்ணசாமி (96) நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தார், பின்னர் அவர் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்து விட்டு கூறுகையில், ‘நான் மேலே கண்ட முகவரியில் கடந்த 65 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறேன். என் வீட்டிற்கு பட்டா கேட்டு சுமார் 5 வருடங்களுக்கு முன்பு திண்டுக்கல் ஆர்டிஓ அலுவலகத்தில் வந்து மனு அளித்தேன். தொடர்ந்து ஜமாபந்தியில் மனு அளித்தேன். ஆனால் இதுவரை எனக்கு பட்டா தரவில்லை. மேலும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்குரிய 5 சென்ட் நிலமும் எனக்கு இதுவரை வழங்கவில்லை. எனக்கு சொந்த இடமின்றி தவிர்த்து வருகிறேன். எனவே எனக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்குரிய 5 சென்ட் நிலமும் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், நான் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாகவோ அல்லது வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக விஷம் குடித்து என் வாழ்வை முடித்து கொள்வேன்’ என்றார்.

Tags : home ,
× RELATED ஊரடங்கால் பழநியில் மணமகள் வீட்டில் எளிமையாக நடந்த திருமணம்