×

தா.பேட்டையில் நெசவாளர் சேவை மைய கட்டிடம் கட்ட பூமி பூஜை

தா.பேட்டை, ஜன.27: தா.பேட்டையில் ரூ.25 லட்சம் மதிப்பில் நெசவாளர் சேவை மைய புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. முசிறி அருகே தா.பேட்டை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தின் சார்பில் சேவை மைய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து பைத்தம்பாறை செல்லாண்டியம்மன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தின் சார்பாக ரூ.25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சேவை மையம் கட்டிடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து தா.பேட்டையில் நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சிக்கு கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குனர் விஜயராணி தலைமை வகித்தார். எம்எல்ஏ செல்வராஜ்பூமி பூஜை செய்து கட்டுமானப் பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தேமுதிக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் குமார், அதிமுக மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன், அதிமுக நிர்வாகிகள் செங்கமலை, ஜெயம், நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Pooja ,weaver service center building ,
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை