×

உடனடியாக நிரப்ப பெற்றோர்கள் கோரிக்கை மன்னார்குடி செந்தூர ஆஞ்சேநேயர் கோயிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை திரளான பெண்கள் பங்கேற்பு

மன்னார்குடி, ஜன. 28: மன்னார்குடி செந்தூர ஆஞ்சேநேயர் கோயிலில் திருவிளக்கு பூஜையில் திர ளான பெண்கள் பங்கேற்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி திருமஞ்சன வீதியில் உள்ள பிரசித்தி பெற்ற செந்தூர ஆஞ்சேநேயர் கோயிலில் 98 வது ஆண்டு தனூர் மாத பஜனை நிறைவு விழாவையொட்டி திருவிளக்கு பூஜை கோயில் வளாகத்தில் நடைபெற்றது.பூஜையில் பங்கேற்ற பெண்கள் மகாலட்சுமியின் படத்தினை வைத்து பூஜை செய்து மஞ்சள், குங்குமம், தேங்காய் வைத்து குத்து விளக்கேற்றி வேத மந்தி ரங்கள் முழங்க உலக நன்மை வேண்டி வழிபட்டனர். இதனையொட்டி செந் தூர அனுமனுக்கு செந்தூரம் பூசி அலங்கரித்து இருந்தனர். நிறைவாக விளக் கிற்கு தீப, தூப ஆராதனை செய்து வழிப்பட்டனர்.
இதில் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தனூர் மாத பஜனை குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Parents ,females ,Mannargudi Centenary Anjaneyar Temple ,
× RELATED சென்னையில் ஒரே குடும்பத்தை சூறையாடிய...