×

விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அழைப்பு திருவாரூரில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் அதிமுக பொதுக்கூட்டம்

திருவாரூர், ஜன.28: அதிமுகவின் மாவட்ட மாணவரணி சார்பில்திருவாரூரில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் மாவட்ட அமைப்பாளர் விஜயராகவன் தலைமையிலும் நகர செயலாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் மணிகண்டன், பேரவை நகர செயலாளர் கலியபெருமாள் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும் அமைச்சருமான காமராஜ் பேசுகையில், உலகில் அடிமை நாடுகளாக 105 நாடுகள் இருந்த நிலையில் இதில் முதல் முதலாக சுதந்திரம் பெற்றது நமது இந்திய நாடு. ஆனால் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாகவே தமிழ் மொழியை காப்பதற்காகவும், இந்தி மொழியை எதிர்த்தும் தமிழகத்தில் போராட்டம் துவங்கியது. தமிழ் மொழியை காப்பதற்காக தங்களது உயிரை மாய்த்த தியாகிகளின் வீரவணக்க நாள் கூட்டம் நடத்தப்படும் நிலையில் மொழிக்காக போராட்டத்தில் ஈடுபட்ட ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே. எனவே தமிழ் மொழிக்கு எந்த ரூபத்தில் ஆபத்து வந்தாலும் அதனை எதிர்த்து போராட தயங்க மாட்டோம் இவ்வாறு அமைச்சர் காமராஜ் பேசினார். கூட்டத்தில் முன்னாள் எம்.பி.கோபால், பேரவை மாவட்ட செயலாளர் பொன் வாசுகிராமன்,மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பன்னீர்செல்வம் மற்றும் தலைமை கழக பேச்சாளர்கள் நல்லுசாமி, அன்புமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

Tags : Officer ,Farmers A Heroic Day ,Martyrs ,Veteran ,Tiruvarur ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும்