×

கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் வாடகை உயர்வு மன்னார்குடி நகராட்சியை கண்டித்து வர்த்தகர்கள் இன்று கடையடைப்பு

மன்னார்குடி, ஜன. 28: மன்னார்குடி நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களுக்கான வாடகை யை உயர்த்திய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று கண்டன பேரணி மற்றும் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக வர்த் தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மன்னார்குடி நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களுக்கான வாடகை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி கடு மையாக உயர்த்தப்பட்டது. மேலும் திடக்கழிவு மேலாண்மைக்கு என வரை யறை செய்யாமல் ஒழுங்கற்ற முறையில் கட்டணம் நிரனயம் செய்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நகராட்சியின் இத்தகைய அறிவிப்பு வணிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மன்னார்குடி நகராட்சிக்கு கடந்த 5 ஆண்டுகளாக ஆணையர் இல்லாத நிலையை மாற்றி உடனடியாக ஆணையரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மன் னார்குடி வர்த்தக சங்கம் சார்பில் இன்று ( 28ம் தேதி) முழு கடையடைப்பு மற்றும் பெரியார் சிலை அருகில் இருந்து நகராட்சி அலுவலகம் வரை பேரணியாக வந்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், போராட்டத்திற்கு பொது மக்களின் ஆதரவு கோரியும் வர்த்தக சங்கம் சார்பில் நேற்று பேருந்து நிலையம், பந்தலடி, மாவட்ட அரசு மருத்துவமனை, தேரடி மற்றும் கீழப்பாலம் பகுதிகளில் பிரசார கூட்டங்கள் நடைபெற்றது.கூட்டத்திற்கு வர்த்தக சங்க தலைவர் பாரதி ஜீவா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி வர்த்தக சங்க பொது செயலாளர் ஆர்வி ஆனந்த், உள்ளாட்சி கடை வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்எம்டி கருணாநிதி, நகராட்சி கடை வியாபாரிகள் சங்க செயலாளர் கைலை ஊமைத்துரை ஆகியோர் பேசினர் முடிவில் வர்த்தக சங்க பொருளாளர் பிரபாகரன் நன்றி கூறினார். வர்த்தக சங்கம் நடத்தும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு உள்ளாட்சி கடை வியாபாரிகள் சங்கம், நகராட்சி கடை வியாபாரிகள் சங்கம், நகை வியாபாரிகள் சங்கம், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம், தையல் தொழிலாளர் சங்கம், பூக்கடை வியாபாரி கள் சங்கம், வெற்றிலை வியாபாரிகள் சங்கம், நகர் முடிதிருத்தும் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

Tags : Mannargudi ,municipality ,
× RELATED ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த...