×

சித்தமல்லியில் பிப். 2ம் தேதி நடக்கிறது விழிப்புணர்வு கருத்தரங்கம் மீனவர்கள் பங்கேற்க அழைப்பு


முத்துப்பேட்டை, ஜன.28: திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க பொருளாளர் முத்துப்பேட்டை சுரேஷ் வெளியிட்டுள்ளசெய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கடற்கரையை ஒட்டி வசிப்பவர்கள் அதனை நம்பி இருக்கும் தொழிலாளர்கள் பங்கேற்கும் கடற்கரை பாதிப்புகளும் சவால்களும் எனும் தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் வரும் 2ம் தேதி காலை 10 மணிக்கு முத்துப்பேட்டை மன்னார்குடி சாலையில் உள்ள கிராமமான சித்தமல்லி ஏகேஎஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், அறிவியல் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். ஆகவே தாங்கள் பகுதியில் இருக்கும் மீனவ தொழிலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு கருத்து சொல்லவும் கருத்து கேட்கவும் வருகை தர வேண்டும் இவ்வாறு அவர்அதில் கூறியுள்ளார்.

Tags : Pitt ,Awareness seminar ,fishermen ,
× RELATED கோத்தகிரியில் கேர் அறக்கட்டளை...