×

முத்துப்பேட்டையில் குடியரசு தினவிழா

முத்துப்பேட்டை, ஜன.28: முத்துப்பேட்டையில் நேற்று 71வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவிற்கு தலைமையாசிரியர் நித்தையன் தலைமை வகித்தார். இதில் கல்விக்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். முத்துப்பேட்டை நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நகர தலைவர் ஜெகபர் அலி கொடியை ஏற்றி வைத்தார். முத்துபேட்டை புதுக்காளியம்மன் கோவில் அருகே மூத்த குடிமக்கள் இயக்கத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கவுரவ தலைவர் டாக்டர் மீராஉசேன் தேசிய கோடி ஏற்றி வைத்தார். முத்துப்பேட்டை டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி இனிகோ திவ்யன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். முத்துப்பேட்டை கோவிலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் ஒன்றியக்குழு தலைவர் கனியமுதா ேதசியக்கொடியேற்றி வைத்தார். முத்துப்பேட்டை ஆட்டோ சங்கம் சார்பில் நடந்த விழாவில் கௌரவ தலைவர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹீப் கொடியை ஏற்றி வைத்தார். முத்துப்பேட்டை மருதங்காவெளி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாணிக்கம் தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

Tags : Republic Day Festival ,
× RELATED குடியரசு தின விழா அணி வகுப்பு...