×

மன்னார்குடியில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

மன்னார்குடி, ஜன. 28: தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மன்னார்குடியில் நடைபெற்ற வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை வருவாய் கோட்டாட்சியர்(பொ) கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்திய தேர்தல் ஆணையம் துவங்கப்பட்ட தினமான ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண் டாடப் பட்டு வருகிறது. இத்தினத்தினை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு விழா நடைபெற்றது. நாட்டின் குடிமக்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இளம் தலைமுறை யினரை முழுமையாக தேர்தலில் பங் கெடுக்க செய்யும் விதமாக அவர்களை ஊக்கப்படுத்தவும் வாக்காளர் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதில் ஒரு பகுதியாக மன்னார்குடியில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு தாசில்தார் கார்த்திக், நகராட்சி ஆணையர் (பொ) திருமலைவாசன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் இளங்கோவன், ஆர்டிஓ நேர்முக உதவியாளர் பழனிவேல் உள்ளிட்டோர் ஆகியோர் பேசினர்.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை வருவாய் கோட்டாட்சியர் (பொ) ராமச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்து பேசினார்.ராஜகோபால சுவாமி கோயில் அருகில் துவங்கிய பேரணி முக்கிய விதிகள் வழியாக சென்று தேசிய மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது.பேரணியில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஓட்டுப் போடுவதன் அவசியம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து, பொதுமக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தினர். இது தொடர்பான துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர்.

Tags : awareness rally ,Voter Day ,Mannargudi ,
× RELATED மாவட்ட நீதிமன்றம் சார்பில் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி