×

சித்த மருத்துவ கழக கூட்டம்

திருத்துறைப்பூண்டி, ஜன.28: தமிழ் மாநில சித்த மருத்துவ கழக கூ ட்டம் திருத்துறைப்பூண்டி வர்த்தக சங்க கட்டிடத்தில் மாநில தலைவர் ரவீந்திரன் தலைமையில் நடைப்பெற்றது. தேவூர் மணிவாசகம், மன்னார்குடி செரிப், வாய்மேடு வெங்கடாசலம், திருவாரூர் செந்தமிழ்ன், ஜாம்பவா னோடை முருகையன், பாமனி சுப்பையா ஆகியோர் பேசினா். டெங்கு காய்ச்சலுக்கான நிலவேம்பு பப்பாளி இலை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து அறிவிப்பது போல கோரனா வைரஸ்க்கு மருந்தாகும் ஆடாதொடையை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து அரசு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். பிப்ரவரி 7 தேதி வடலூர் மாநாட்டிலும், பிப்ரவரி 16 மாநாட்டிலும் கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக மேட்டுப்பாளையம் அன்பழகன் வரவேற்றார். முடிவில் வீராக்கி விவேகானந்தம் நன்றி கூறினார்.

Tags : Siddha Medical Council Meeting ,
× RELATED திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து...