கும்பகோணம் அல்அமீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 50ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டம்

கும்பகோணம், ஜன. 28: கும்பகோணம் அல்அமீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 50ம் ஆண்டு பொன்விழா நடந்தது. தாளாளர் கமாலுதீன் தலைமை வகித்தார். விழாக்குழு தலைவர் முகமதுரபி வரவேற்றார். தஞ்சை மாவட்ட முஸ்லிம் கல்வி சங்க தலைவர் முகமது இக்பால், கவுரவ தலைவர் ஜிர்ஜிஸ், ஹபீபுர் ரஹ்மான் முன்னிலை வகித்தனர். பொன்விழா நினைவு புதிய கட்டிடத்தை தொழிலதிபர்கள் அப்துல்பாரி, ஷாகுல் ஹமீது திறந்து வைத்தனர். திருச்சி மத்திய மண்டல அஞ்சல்துறை இயக்குனர் தாமஸ் லூர்துராஜ் பொன்விழா நினைவு சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டார். கும்பகோணம் சீமாட்டி சில்க்ஸ் உரிமையாளர் பஷீர்அஹமது அஞ்சல் உறையை பெற்று கொண்டார். ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி, மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம், எம்எல்ஏக்கள் சாக்கோட்டை அன்பழகன், கோவிசெழியன், அதிமுக முன்னாள் நகர செயலாளர்கள் சேகர், ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொன்விழா மலரை சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் காமகோடி வெளியிட அல்அமீன் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மாலிக் பெற்று கொண்டார். இதையடுத்து புதிதாக 5 ஏக்கரில் கட்டப்படவுள்ள மகளிர் கல்லூரிக்கு சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர்அலி அடிக்கல் நாட்டினார். பள்ளி முதல்வர் சையது அப்துல் சுபகான் நன்றி கூறினார்.

Tags : Golden Jubilee Celebration ,Kumbakonam Al-Ameen Matric Secondary School ,
× RELATED கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் மேலவீதி,...