×

திருமயத்திலிருந்து மாலை நேரத்தில் கிராம பகுதிகளுக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும்

திருமயம், ஜன.28: திருமயத்தில் இருந்து மாலை நேரங்களில் கிராம பகுதிகளுக்கு கூடுதல் அரசு பஸ் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 2 அரசு மேல் நிலைப்பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன. மேலும் மதுரை, சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், பள்ளத்தூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி ராயவரம், பொன்னமராவதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு திருமயம் வழியாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் காலை, மாலை நேரங்கள் வெளியூர் சென்று படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது திருமயத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களும் ஒரே நேரத்தில் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். இதில் தொலை தூரம் செல்லும் பஸ்கள் அதிகளவு இயக்கப்படும் நிலையில் ராயவரம், பொன்னமராவதி, நமணசமுத்திரம்மார்க்கமாக கிராம பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் முடிந்து வீட்டுக்கு செல்ல மாலை நேரங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே நேரத்தில் பஸ்சுக்காக டவுன் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் டவுன் பஸ் திருமயம் பஸ் ஸ்டாண்ட் வந்ததும் பஸ்சில் ஏறி இடம் பிடிப்பதற்காகமாணவ, மாணவிகள் புத்தக பையை சுமந்து கொண்டு முண்டியடித்து கொண்டு ஏறுவதை பார்க்கும் போது பரிதாபமாக உள்ளது. அதே சமயம் பஸ்சுக்குள் ஏற முடியாத மாணவர்கள் பஸ்சின் இரண்டு படிக்கட்டுகளிலும் தொங்கி கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்வதை பார்க்கும்போது நெஞ்சம் பதபதைப்பாக உள்ளதாக மாணவர்களின் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனிடையே ஒரு சில பள்ளி மாணவர்கள் சாகசம் செய்வது போல் படியில் தொங்கி கொண்டு அலப்பறைகள் கொடுப்பதை பார்க்கும் போது வேதனை அளிப்பதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். எதுவாயினும் மாணவர்களின் நலன் கருதி திருமயத்தில் இருந்து ராயரவம், பொன்னமராவதி, நமணசமுத்திரம் பகுதிகளுக்கு பள்ளி தொடங்கும் முடியும் நேரம் கூடுதல் டவுன் பஸ் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மகளிர் பேருந்து இயக்கப்படுமா?
புதுக்கோட்டையில் இருந்து திருமயம் செல்லும் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் 5 பிரபல தனியார் கல்லூரிகள், 10க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வரும் நிலையில் ஏராளமான பெண் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் புதுக்கோட்டை, திருமயம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அரசு, தனியார் பொது பஸ்களில் பயணம் செய்யும் நிலையில், சில சமூக விரோதிகளால் பஸ்சில் பயணம் செய்யும் பெண்களுக்கு தொல்லைகள் ஏற்படுத்துவதாகவும்,மாணவிகள் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொள்வதாகவும் புகார் தெரிவத்தனர். எனவே புதுக்கோட்டையில் இருந்து திருமயம் வரை காலை, மாலை நேரங்களில் மகளிர் மட்டும் பஸ் இயக்குவது நல்லது என மாணவிகள், பெண்கள் யோசனை தொpவித்தனர்.

Tags : Thirumayam ,areas ,
× RELATED புதுக்கோட்டையில் மழை காரணமாக ஒன்றிய...