×

திருமயம் அடுத்த ஊனையூரில் ரயில்வே சுரங்கப்பாதைக்கு மாற்றுத் தீர்வு ஏற்படுத்தப்படும்

திருமயம், ஜன.28: அரிமளம், திருமயம் ஒன்றியத்தில் ஒரு சில பிரச்னைகளுக்கு இடையே கிராம சபை கூட்டம் அமைதியாக நடைபெற்று முடிந்தது. நாட்டின் 71வது குடியரசு தின விழா நேற்று முன்தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடபட்டது. இதனிடையே புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியத்தில் உள்ள மேலபனையூர் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் மேகநாதன், அரசம்பட்டி லெட்சுமி, ஆதனூர் மல்லிகா, கோனபட்டு சுப்புலெட்சுமி, குலமங்களம் சத்யா, திருமயம் சிக்கந்தர், கோட்டூர் சுமதி, லெம்பலக்குடி பாலு, மேலூர் லதா, கே.பள்ளிவாசல் காத்தாயி, பேரையூர் விஜயா, ஊனையூர் மல்லிகா உள்ளிட்ட 33 ஊராட்சிகளில் அந்தந்த ஊராட்சி தலைவர்கள் கோடியேற்றினர். இதேபோல் அரிமளம் ஒன்றியத்தில் ஏம்பல் கனிமொழி, ஓணாங்குடி முருகேசன், கடியாபட்டி உமாமகேஸ்வாp, கடையக்குடி இன்பவள்ளி,கும்மங்குடி பழனியப்பன்,கே.செட்டிபட்டி தவமணி,செங்கீரை அழகு, தேக்காட்டூர் முத்துலெட்சுமி உள்ளிட்ட 32 ஊராட்சிகளில் அந்தந்த ஊராட்சி தலைவர்கள் கொடியேற்றி உரை நிகழ்த்தினர்.

இதனை தொடாந்து ஒவ்வொரு ஊராட்சியிலும் அந்தந்த ஊராட்சி தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பெரும்பாலும் தெருவிளக்கு, குடிநீர் தட்டுப்பாடு போக்குதல், சாலை வசதி ஏற்படுத்துதல், வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை விரிவுப்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டது. திருமயம் அருகே உள்ள ஊனையூர் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் ரயில்வே துறை மூலம் அமைக்கப்பட்ட சுரங்க பாதை சிறியளவு மழைக்கு கூட மழை நீரில் மூழ்குவதால் இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பதோடு ஊனையூர் பஸ் ஸ்டாப்பில் அனைத்து பஸ்சுளும் நின்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதே சமயம் புலிவலம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் கருப்பாயி தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தலைவரின் மகன் தன்னார்வலராக பணியாற்ற தலைவர் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் சல சலப்பு ஏற்பட்டது. இது இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் வரை சென்றதால் தீர்மானத்தில் கைவிடப்பட்ட நிலையில் பிரச்ணை ஏற்படும் சூழல் உருவானது.
இதனால் சம்பவ இடத்திற்கு வந்த நமணசமுத்திரம் போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இதனை தொடர்ந்து புலிவலம் ஊராட்சி குடிநீர், சாலை, சிசிடிவி கேமரா அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : railway subway ,Unaoiyur ,Tirumayam ,
× RELATED பொன்னமராவதியில் 100 சதவீத வாக்களிக்க விழிப்புணர்வு