×

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமப்புறங்களுக்கு கூடுதலாக பேருந்து இயக்கப்படுமா?

புதுக்கோட்டை, ஜன.28: புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு கிராகமங்களுக்கு கூடுதலாக நகர பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள்,மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 கிராம பஞ்சாயத்துகள் உள்ளது. இந்த பகுதிகளில் மாணவர்கள் நகர் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளிக்கு சென்றுவருவதற்கு தங்கள் கிராமத்திற்கு வரும் நகர பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பெருவாரியான பகுதிகளில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் எந்த பேருந்து இயக்கப்பட்டதோ அதே பேருந்து மட்டுமே தற்போது வரை இயக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். தற்போது தொடர்ந்து மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் கிராமத்தில் இருந்து நகர் பகுதிக்கு படிப்போர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. இதனால் கிராமத்திற்கு வரும் நகர பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் வழக்கத்தைவிட அதிகரித்துவிட்டது. இதனால் பேருந்துகளில் படிகளின் தொங்கிகொண்டு ஆபத்தான நிலையில் மாணவர்கள் பயணிக்கின்றனர். எனவே மாணவ, மாணவிகள் நலனை கருத்தில் கொண்டு முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர பேருந்துகள் ஒரு சில வழித்டங்களில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேருந்திற்கு மேல் கூடுதல் பேருந்துகள் இயக்கவிலலை. இதனால் இந்த பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் இருக்கிறது. இதனால் பள்ளிகள் தொடங்கியுள்ள, இந்த நேரத்தில் மாணவ, மாணவிகள் சிரமங்களை அனுபவிக்கின்றனர். மேலும் இன்னும் சில நாட்களில் கல்லூரிகளும் தொடங்கப்படவுள்ளது. அப்போது இன்னும் மாணவ, மாணவிகளின் கூட்டம் அதிரிக்கும். பேருந்துகளில் கூட்டம் அதிகரிப்பால் பேருந்துகள் ஆங்காங்கே பழுதாகி நிற்கும். இதனை கருத்தில் கொண்டு விரைந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்தெந்த பகுதியில் பேருந்துகள் கூடுதலாக இயக்க முடியுமோ அந்த பகுதியில் கூடுதலாக நகர பேருந்துகளை இயக்க வேண்டும் என்றனர்.

Tags : areas ,Pudukkottai ,
× RELATED தலைகுந்தா பகுதியில் சாலையோரத்தில் புலி நடமாட்டம்: வீடியோ வைரல்