வடக்குராஜவீதி நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் பள்ளங்களை சீரமைக்க வேண்டும்

புதுக்கோட்டை, ஜன.28: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை வகித்து மனுக்களை பெற்றார். அப்போது புதுக்கோட்டை நகர தி.மு.க. செயலாளர் நைனாமுகம்மது தலைமையில், தி.மு.க.வினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை நகரில் உள்ள முக்கியமான சாலையாக வடக்குராஜவீதி மாநில நெடுஞ்சாலை ஆகும். இந்த சாலையில் பெரும்பாலான இடங்களில் பெரிய பெரிய பள்ளங்கள் உள்ளன. குறிப்பாக திலகர் திடல் பகுதியில் மெகா பள்ளங்கள் உள்ளன. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இந்த சாலையில் விபத்து நடைபெற்றால், 108 ஆம்புலன்ஸ் வாகனம் கூட விரைந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த குண்டும், குழியுமான சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். மேலும் சாலையை சீரமைக்கும்போது, மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத அளவிற்கு சாலையை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : motorists ,Northern Raja Highway ,
× RELATED மக்கள் கடும் அவதி நடவடிக்ைக எடுக்க...