×

தகுதியானோர் பங்கேற்க அழைப்பு உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்தவர்களையும் அரவணைத்து ஊரின் முன்னேற்றத்துக்காக பணியாற்றுங்கள்

அரியலூர், ஜன. 28: அரியலூர் மாவட்டம் மருவத்தூர் ஊராட்சியில் 71வது குடியரசு தின கிராமசபை கூட்டம் ஊராட்சி தலைவர் சத்யா முருகன் தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி அல்லி பங்கேற்று பேசுகையில், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்களையும் அரவணைத்து ஊரின் முன்னேற்றத்துக்காக பணி செய்ய வேண்டும். மேலும் அனைத்து அரசியல் கட்சியினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார். இதையடுத்து மருவத்தூர் ஊராட்சி தூய்மை நிறைந்த பசுமை கிராமமாக மாற்றுவதற்கான முதல் நிகழ்வாக காசான்பள்ளம் ஏரியில் மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார். சட்ட ஆலோசகர் பகுத்தறிவாளன், செயலாளர் மணி மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் பெரியாகுறிச்சியில் நடந்த கூட்டத்தில் ஊராட்சி தலைவர் கோகிலா அழகுதுரை தலைமை வகித்தார். இதில் ஊரில் முக்கிய இடங்களில் உயர் கோபுர விளக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தளவாய் கிராமத்தில் நடந்த கூட்டத்தில் ஊராட்சி தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். இதில் பெண்ணாடத்தில் இருந்து தளவாய், சன்னாசிநல்லூர் வழியாக திட்டக்குடிக்கு பேருந்து வசதியும், பகுதிநேர கால்நடை மருத்துவமனை வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் சன்னாசிநல்லூரில் தலைவர் நன்னன் தலைமையிலும், நல்லாம்பாளையம் ஊராட்சியில் கொளஞ்சியப்பா தலைமையிலும், உஞ்சினியில் முருகேசன் தலைமையிலும் கிராமசபை கூட்டம் நடந்தது.

Tags : elections ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...