×

அரியலூரில் குறைதீர் கூட்டம் 69 மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்

அரியலூர், ஜன. 28: அரியலூரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 69 மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது. அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 368 கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் மனுக்கள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைதொடர்ந்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் அரியலூர் ஒன்றயத்தை சேர்ந்த 11 குழந்தைகளுக்கு 14 உபகரணங்கள், திருமானூர் ஒன்றியத்தை சேர்ந்த 21 குழந்தைகளுக்கு 27 உபகரணங்கள், செந்துறை ஒன்றியத்தை சேர்ந்த 20 குழந்தைகளுக்கு 25 உபகரணங்கள், ஆண்டிமடம் ஒன்றியத்தை சேர்ந்த 17 குழந்தைகளுக்கு 23 உபகரணங்கள் என மொத்தம் 69 குழந்தைகளுக்கு 89 உபகரணங்கள் ரூ.3,19,763 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, சிறப்பு சக்கர நாற்காலி, நடைபயிற்சி சாதனம், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான கற்றல் கற்பித்தல் உபகரணம், பார்வையற்ற குழந்தைகளுக்கான கற்றல், கற்பித்தல் உபகரணம் மற்றும் முடநீக்கியல் சாதனங்களை வழங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொன்னி, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி புள்ளியியல் அலுவலர் பால்பாண்டி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதிதாசன், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் சிவசங்கரன், அமுதா மற்றும் சிறப்பு பயிற்றுனர்கள், இயன்முறை பயிற்சியாளர்கள், அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : meeting ,Ariyalur 69 ,persons ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...