×

எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்


பாடாலூர், ஜன 28: ஆலத்தூர் ஒன்றிய அதிமுக சார்பில் வரகுபாடி கிராமத்தில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் கர்ணன் தலைமை வகித்தார். ஒன்றிய குழு துணை தலைவர் சுசீலா, காரை கூட்டுறவு சங்க இயக்குநர் ரெங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்பி சந்திரகாசி அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி பேசினார்.கூட்டத்தில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தங்கவேல், முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் மாணிக்கம், ஒன்றிய மாணவரணி தலைவர் கலையரசன், ஒன்றிய பேரவை செயலாளர் சண்முகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் செட்டிகுளம் சசிகுமார், இரூர் ஸ்டாலின் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : MGR ,birthday party ,
× RELATED பிறந்தநாள் பார்ட்டி கொடுத்த பாடகி...