×

பெரம்பலூரில் திமுக முதன்மை செயலாளர் கேஎன்.நேருவுக்கு ராசா தலைமையில் உற்சாக வரவேற்பு

பெரம்பலூர், ஜன. 28: திமுக முதன்மை செயலாளராக நியமிக்கப் பட்டுள்ள கே.என்.நேருவுக்கு பெரம்பலூரில் முன்னாள் மத்திய அமைச்சரும், கொள்கை பரப்பு செயலாளருமான ராசா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான கேஎன்.நேரு எம்எல்ஏ, திமுக கட்சியின் முதன்மை செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று புதிய பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக பெரம்பலூர் வருகை தந்த திமுக முதன்மை செயலாளர் கேஎன்.நேருவுக்கு முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக கழக கொள்கை பரப்பு செயலாளருமான ராசா எம்பி தலைமையில் பாலக்கரையில் உள்ள பெரம்பலூர் மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட திமுகவினர் உற்சாகமாக வரவேற்று பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். திமுக கொள்கை பரப்பு செயலாளர் சிவா எம்பி, மாவட்ட செயலாளர்கள் குன்னம் ராஜேந்திரன், அரியலூர் சிவசங்கர், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் பெருநற்கிள்ளி, முன்னாள் எம்எல்ஏ துரைசாமி, மாநில நிர்வாகிகள் டாக்டர் வல்லபன், பெரியசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : KN Nehru ,Raza ,DMK ,Perambalur ,
× RELATED மக்களவைத் தேர்தல்: திமுக தொகுதி...