×

பாடாலூர் அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா

பாடாலூர், ஜன 28: ஆலத்தூர் தாலுகா பாடாலூர்  அம்பாள்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 19-ம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மதியழகன் தலைமை வகித்தார்.  அம்பாள்ஸ் டிரஸ்ட் செயலாளர் குணச்சந்திரன், பாடாலூர் லயன்ஸ் சங்கத்தின் சாசனத் தலைவர் திருஞானசம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் முதல்வர் ஆர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். சொற்பொழிவாளரும், எழுத்தாளருமான சுமதி  சிறப்புரையாற்றினார். வைஸ் நிறுவனத்தின் துணை மேலாளர் ஸ்டாலின், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கோல்டன் ராஜேந்திரன். பாடாலூர் வணிகர் சங்க தலைவர் ஆனந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் கடந்த 18 -19ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பில் பெரம்பலூர் மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்த மாணவிக்கும், கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது, பின்னர் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது, நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். பள்ளியின் துணை தாளாளர் கேசவ் பாலாஜி நன்றி கூறினார்.

Tags : Padalur Ambal Matric Secondary School Anniversary ,
× RELATED முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன் 17ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு