×

ஏரிக்கு குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி சாவு

பாடாலூர், ஜன 28: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே ஏரிக்கு குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி இறந்தார். ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே உள்ள மேலமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் இவரது மகன் வேலுச்சாமி (28).
கூலித் தொழிலாளி இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது.இந்நிலையில், நேற்று மாலை மது போதையில் இருந்த வேலுச்சாமி, அதே பகுதியில் உள்ள பெரிய ஏரிக்கு குளிக்கச் சென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இறந்தார். தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துச்சென்று வேலுச்சாமியின் உடலை மீட்டு பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து குன்னம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : lake ,
× RELATED சென்னையில் சானிடைசரை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த இளைஞர் கைது