×

திருமாநிலையூர் அமராவதி பாலத்தில் தீண்டாமை சுவரை இடிக்க வேண்டும்

கரூர், ஜன. 28: திருமாநிலையூர் அமராவதி பாலத்தில் கட்டப்பட்டுள்ள தீண்டாமை சுவரை இடிக்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன், சாமானிய மக்கள் கட்சி குணசேகரன், சண்முகம், ஜெயராமன், தனபால் உள்ளிட்டோர் அளித்த மனுவில், கரூர் திருமாநிலையூர்பகுதியில் அமராவதி பழைய பாலத்தில் பூங்கா அமைக்கப்படுகிறது. தென்பகுதியில் திருமாநிலையூரை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் பயன்படுத்திவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் தீண்டாமை சுவர் கட்டப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பயன்படுத்துகின்ற வகையில் ஆவன செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர், கரூர் தாலுகா திருமுக்கூடலூரை சேர்ந்த சித்ரா என்பவர் அளித்த மனுவில், இப்பகுதியில் ஒருவர் சுகாதாரகேடு ஏற்படுத்துகின்ற வகையில் கழிவுநீர் குழாய் அமைத்துள்ளார். இதனால் கொசுத்தொல்லை ஏற்பட்டு காய்ச்சலுடன் வாழ்ந்து வருகிறோம். பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. கழிவுநீர் குழாயை அகற்றி நிம்மதியாக வாழ வழிசெய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Demolition ,bridge ,Thirumanthalayoor Amaravathi ,
× RELATED புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20...