வரி விளம்பரம் குத்து சண்டை போட்டி கரூர் கல்லூரி மாணவ, மாணவியர் சாதனை

கரூர், ஜன. 28: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு இடையேயான குத்துச்சண்டைபோட்டிகள் புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதில் கரூர் அரசுகலைக்கல்லூரி மாணவர் பாலசுப்பிரமணியன் 55 கிலோ எடைபிரிவில் வெண்கல பதக்கம், குகன் 65 கிலோ எடைபிரிவில் வெண்கல பதக்கம், விஜயசாரதி வெள்ளிபதக்கம், சீனிவாசன் வெண்கலம் வென்றனர். பெண்கள் பிரிவில் மணிமேகலா 51கிலோ பிரிவில் வெண்கல பதக்கம், மதுபாலா 69 கிலோ எடைபிரிவில் வெள்ளி பதக்கம் வென்றனர். வெற்றி பெற்றவர்களை கல்லூரி முதல்வர் முனைவர் கவுசல்யாதேவி, உடற்கல்வி துறை இயக்குனர் முனைவர் ராஜேந்திரன், உடற்கல்வி பயிற்றுனர் சரவணன், நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராஜன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

Related Stories:

>