வேலாயுதம்பாளையம் அருகே தாயுடன் தகராறு வாலிபர் தற்கொலை

கரூர், ஜன. 28: கரூர் வேலாயுதம்பாளையம் அருகே குடும்பத் தகராறு காரணமாக வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள தளவாபாளையத்தை சேர்ந்தவர் சரவணன்(24). கார் டிரைவர். திருமணமாகவில்லை. சரவணன், அடிக்கடி தாயிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சரவணனின் தாயார், சரவணணுக்கு பெண் பார்ப்பதற்காக வெளியூர் சென்று விட்டார். அப்போது தனியாக வீட்டில் இருந்த சரவணன், விரக்தியடைந்து, தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>