×

பூட்டி கிடக்கும் அங்கன்வாடி மையம் செம்மடை ரவுண்டானாவில் சிதிலமடைந்த நிழற்குடை சீரமைக்கப்படுமா?

கரூர், ஜன. 28: கரூர் மாவட்டம் செம்மடை ரவுண்டானா பகுதியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள நிழற்குடை சீரமைக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாவட்டம் செம்மடை ரவுண்டானா பகுதியில் ராமேஸ்வரப்பட்டி, பெரியவடுகப்பட்டி போன்ற பல்வேறு கிராமங்களுக்கு செல்வதற்கான சாலை பிரிகிறது. இந்த பகுதி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், கரூர், வாங்கல் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வகையில் ரவுண்டானா அருகே நிழற்குடை அமைக்கப்பட்டு சில ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்தது. தற்போது நிழற்குடையின் இருக்கைகள் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே, பயணிகளின் நலன் கருதி சிதிலமடைந்துள்ள நிழற்குடையை சீரமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் உள்ள நிழற்குடையை சீரமைத்து தர தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Anganwadi Center ,Shemmadu Roundabout ,
× RELATED துறையூர் அருகே 6 ஆண்டுக்கு பின் மின் இணைப்பு தரப்பட்ட அங்கன்வாடி மையம்