×

மாநகராட்சிக்கு எதிரே உள்ள நிழற்குடையை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை


திருப்பூர், ஜன.28:  மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள பயணிகள் நிழற்குடையை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூர் மங்கலம் ரோட்டில், மாநகராட்சி அலுவலகத்துக்கு எதிரே நிழற்குடை உள்ளது. அப்பகுதி தற்போது, ‘ஷேர் ஆட்டோக்கள்’ நிறுத்தும் பகுதியாக மாறிவிட்டது. பகல் மற்றும் இரவு நேரங்களில் நிழற்குடையை குடிமகன்கள் ஆக்கிரமித்துகொள்கின்றனர். பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து வரும் பஸ்கள், புதுமார்க்கெட் வீதியை கடந்து, இடதுபுறம் திரும்பி, மங்கலம் ரோடு வழியாக செல்கின்றன. புதுமார்க்கெட் வீதி, மாநகராட்சி அலுவலக சந்திப்பில் சிக்னலுக்காக பஸ் நிற்கும்போது, பயணிகள் பலரும் பஸ்சில் ஏறுகின்றனர். பலர் அப்பகுதியில் நிரந்தரமாக நிற்பதால், பஸ்களும் நின்று  அவர்களை ஏற்றிச் செல்கின்றன. மங்கலம் ரோட்டில் உள்ள நிழற்குடையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால், புதுமார்க்கெட் சிக்னல் பகுதியில் பயணிகளை ஏற்றிச் செல்வது தவிர்க்கப்படும். போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது.

Tags : corporation ,
× RELATED மாநகராட்சி மேயர், கமிஷனர் வரிசையில் நின்று வாக்களிப்பு