×

பணியின் போது எஸ்ஐ மரணம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றியவர் இந்திரன்(56). இவர் கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் சுக்குபாறை தேரிவிளை பகுதியை சேர்ந்தவர். இவரது மனைவி ஆதிலெட்சுமி. இரண்டு வாரங்களுக்கு முன்பு இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். நேற்றிரவு தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் வழக்கம் போல் இந்திரன் பணியில் இருந்தார். அப்போது பாம்பனில் இருந்து ராமேஸ்வரம் வந்த அரசு பேருந்தில் போதையில் இரண்டு பேர் தகராறு செய்துள்ளனர். இதையடுத்து பேருந்து ஓட்டுனர் தங்கச்சிமடம் காவல் நிலையத்தின் முன்பு பேருந்தை நிறுத்திவிட்டு போலீசாரிடம் புகார் செய்தார். அவர்களிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இந்திரன் இறந்தார். அவரது உடல் நேற்று இரவு அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது….

The post பணியின் போது எஸ்ஐ மரணம் appeared first on Dinakaran.

Tags : SI ,Rameswaram ,Indran ,Dangkimadam ,station ,Kanyakumari District ,Dendamarakulam Chukubalam ,
× RELATED மின் தடையை சீரமைக்க கோரிக்கை