சாலை பணியாளர்கள் 4 நாள் காத்திருப்பு போராட்டம் நிறைவு

கோவை, ஜன. 28: கோவை திருச்சி சாலையில் உள்ள தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில் சாலை பணியாளர்கள் தொடர்ந்து 4 வது நாளாக குடும்பத்துடன் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே நேற்று மாலை நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவர்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.கோவை திருச்சி சாலையில் உள்ள தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் ஒரு அதிகாரி சாலை பணியாளர்களின் ஊதியத்தை பிடிப்பது, சட்டப்படியான பலன்களை தர மறுப்பது, திட்டமிட்டே சாலை பணியாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து செய்து வருவதாக சாலை பணியாளர்கள் குற்றம்சாட்டினர். இதை கண்டித்து சாலை பணியாளர்கள் சங்கத்தினர் கடந்த 24ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என சாலை பணியாளர்கள் கோரிக்கை வைத்தனர் ஆனால் இதற்கு அதிகாரிகள் முன்வரவில்லை எனவே காத்திருப்பு போராட்டம் நான்கு நாட்களாக நடந்தது. இதனிடையே நேற்று மாலை சாலை பணியாளர்களுடன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

Related Stories:

>