×

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார செவிலியர்கள் போராட்டம்

ஈரோடு, ஜன. 28:  தற்காலிக பணி நீக்க உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் சுகாதார செவிலியர்கள் பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டனர்.
 ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சுகாதார செவிலியர்கள் மீது துறை ரீதியாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும், தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பெருந்திரள் முறையீடு நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு பகுதி சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் செல்லம்மாள், கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில செயலாளர் செந்தாமலர், பகுதி சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஜெயலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர்.  தமிழ்நாடு பகுதி சுகாதார செவிலியர் சங்கத்தின் மாநில துணை தலைவர் சாரதாம்பாள் சிறப்புரையாற்றினார். கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில செயலாளர் உஷாராணி கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாநில துணை தலைவர் லதா நன்றி கூறினார்.




Tags : Health nurses ,
× RELATED திருவெறும்பூர் அருகே காட்டூரில்...