×

பெண் பயணியிடம் 5 பவுன் நகை திருட்டு

தேன்கனிக்கோட்டை,  ஜன.28: தேன்கனிக்கோட்டை  அருகே சாலிவரம் கிராமத்தைச் சேர்ந்த ரவி மனைவி கெம்பம்மா(40). நேற்று  காலை, தேன்கனிக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் சாலிவாரத்திற்கு செல்ல பஸ்சில் ஏற  முயன்றார். அப்போது கூட்ட நெரிசலில் பின்னால் வந்த மர்ம நபர், கண்ணிமைக்கும்  நேரத்தில் கெம்பம்மாவின் பையில் இருந்த பர்சை எடுத்துக்கொண்டு தப்பினார். பஸ்சில் ஏறிய பின்னர், கெம்பம்மா டிக்கெட் எடுக்க பர்சை  தேடும்போது பர்ஸ் காணவில்லை. அந்த பர்சில் 5 பவுன் செயினை வைத்திருந்தார். இது  குறித்து தேன்கனிக்கோட்டை போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அதேபோல்,  நேற்று முன்தினம், ஓசூரை சேர்ந்த சிவானந்தம் மனைவி அமுதா(37) என்பவர்  பஸ் ஏறும் போது, அவரது பையில் இருந்த ₹5 ஆயிரத்தை மர்ம நபர் திருடி சென்றார். தேன்கனிக்கோட்டை பஸ்  ஸ்டாண்டில் ஜேப்படி திருடர்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. பஸ் ஸ்டாண்டில், சிசிடிவி கேமரா இருந்தும்  அடிக்கடி பயணிகளிடம் திருடர்கள் கைவரிசை காட்டுகின்றனர். எனவே, பஸ் ஸ்டாண்டில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கேரளாவில் கல்லறையில் படுத்த பயணி