×

கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் காட்சி பொருளான சிசிடிவி கேமராக்கள்

கும்மிடிப்பூண்டி. ஜன. 28: கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் திருட்டு, வழிப்பறி சம்பவங்களை தடுக்க செயல்படாமல் உள்ள சிசிடிவி கேமராக்களை சரிசெய்ய வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி பஜாரில் 500க்கும் மேற்பட்ட கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளது. கும்மிடிப்பூண்டி பகுதியை கண்காணிக்கவும் பொதுமக்கள் பாதுகாப்புக்காவும் கும்மிடிப்பூண்டி அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில், கும்மிடிப்பூண்டி பஜாரில் 15 லட்சம் செலவில் 25 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. இவற்றை பராமரித்து, கண்காணிப்பதற்காக போலீசாருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புறக்காவல் நிலையமும் கட்டப்பட்டது.  இந்த புறக்காவல் நிலையத்தை முந்தைய திருவள்ளுர் மாவட்ட கண்காணிப்பாளர் சாம்சன் திறந்து வைத்தார்.

ஆனால் தற்போது புறக்காவல் நிலையம் ஓய்வறையாக மாறியுள்ளது. வர்தா புயலின்போது சேதம் அடைந்த 25 கண்காணிப்பு கேமராக்கள் இதுவரை சரிசெய்யப்படவில்லை. இதனால் பஜார் பகுதியில் அடிக்கடி திருட்டு நடக்கிறது. கடைகளை உடைத்து கொள்ளையடிக்கின்றனர். பெண்களை குறிவைத்து வழிப்பறி அதிகமாக நடைபெறுகிறது. இரவு நேரங்களில் திருட்டுக்கள் அதிகரித்துள்ளது. எனவே, கும்மிடிப்பூண்டி புறக்காவல் நிலையத்துக்கு போலீசார் நியமிக்க வேண்டும். உடனடியாக கண்காணிப்பு கேமராக்கள் சரிசெய்ய வேண்டும் என்று கும்மிடிப்பூண்டி அனைத்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Gummidipoondi Bazaar ,
× RELATED கும்மிடிப்பூண்டி பஜாரில் பூஸ்டர்...