×

பெரியபாளையம் அருகே காதர்வேடு கிராமத்தில் இடிந்து விழும் அபாயத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி

ஊத்துக்கோட்டை, ஜன. 28: பெரியபாளையம் அருகே காதர்வேடு கிராமத்தில் பழுதடைந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டியை அகற்றவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே மாம்பள்ளம் ஊராட்சியில்  காதர்வேடு கிராமம் உள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் வசதிக்காக 25 வருடங்களுக்கு முன்பு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.தற்போது அதன் தூண்கள் சிதிலமடைந்து சிமெண்ட் பூச்சுகள் உடைந்து கம்பிகள் வெளியே தெரிந்து எலும்பு கூடுகள் போல் காட்சியளிக்கிறது. இந்த குடிநீர் தொட்டி  எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

தற்போது, இந்த மேல்நிலை தொட்டி பயன்பாட்டில் இல்லை. எனவே, ஆபத்தான நிலையில் உள்ள இந்த தொட்டியை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “காதர்வேடு கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது. இது ஆபத்தான நிலையில் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இதை அகற்ற வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிராம சபை கூட்டத்திலும் கோரிக்கை வைத்துள்ளனர்.   உடனே அகற்றாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என கூறினர்.

Tags : village ,Periyapayam ,Katharvedu ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு...