×

கடம்பாடி கிராமத்தில் சேதமடைந்த குடிநீர் தொட்டி

மாமல்லபுரம், ஜன. 28: மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிராமத்தில் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. கடம்பாடியில் இருந்து கிழக்கு கடற்கரை செல்லும் சாலையில் கடம்பாடி  ஊராட்சி நிர்வாகம் சார்பில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஒரு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. 5 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருந்து தொட்டி, முறையாக பராமரிக்காமல் விட்டதால், கடந்த 3 ஆண்டுகளாக பாழடைந்து கேட்பாரற்று கிடக்கிறது. இந்த ஒரு தொட்டியில் வரும் தண்ணீர் பிடித்து குடிப்பதற்கும், சமைப்பதற்கும் அப்பகுதி மக்கள் பயன்படுத்தினர். இந்த தொட்டியின் ஒரு பகுதியில், விரிசல் ஏற்பட்டுள்ளது. அதில், உள்ள குழாய்கள் துருப்பிடித்தும் பாழடைந்தும் காட்சி பொருளாக உள்ளது. இதனால், தண்ணீர் பிடித்து பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதுதொடர்பாக ஊராட்சி செயலாளரிடம் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், நேரில் சென்று புகார் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் கடந்த 8 ஆண்டுக்கு முன் ஊராட்சி நிர்வாகம் சார்பில், ஒரு குடிநீர் தொட்டி அமைத்து, பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்தது. அதை முறையாக பராமரிக்காததால், கடந்த 3 ஆண்டுகளாக பயன்படுத்த முடியாமல் இருக்கிறது. மேலும், அதில் உள்ள குழாய்கள் துருப்பிடித்து பயனற்று கிடக்கிறது.
இதனை, அதிகாரிகள் ஆய்வு செய்து, குடிநீர் தொட்டியை சரி செய்யவேண்டும் என்றனர்.

Tags : Kadambadi ,village ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...