×

நெடுவயல் டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

தென்காசி, ஜன. 24:  அச்சன்புதூர் நெடுவயலை சேர்ந்த சாந்தகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் வசித்து வரும் மக்களில் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் விவசாய கூலி வேலை செய்து வருகிறோம். நாங்கள் குழுடியிருக்கும் குடியிருப்பு பகுதிக்கு அருகாமையிலும், அதிக விவசாய நிலங்கள் அமைந்துள்ள நயினாரகரம் - நெடுவயல் குறுக்கு ரோட்டில் டாஸ்மாக் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனால் விவசாய கூலி வேலைக்கு செல்லும் பெண்களுககு பாதுகாப்பற்ற நிலையும், அச்சமும் ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக் கடையில் விற்கப்படும் மதுபாட்டில்கள் மற்றும் அதற்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளால் விவசாய நிலம் மற்றும் நீர் மாசு ஏற்படுகிறது. எனவே பெண்களின் பாதுகாப்பு மற்றும் விவசாய நிலங்களை கருதி நெடுவயல் அச்சன்புதூரில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.
முன்னதாக காலையில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள், ஆண்கள் கடையை திறக்க விடாமல் முற்றுகையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி