×

சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி அம்பையில் இலவச மருத்துவ முகாம்

அம்பை, ஜன. 24:  அம்பை வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில், சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி தனியார் ஆலையில் இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம் நடந்தது. தென்காசி ஆர்டிஓ கருப்பசாமி தலைமை வகித்தார். ஆலை துணை தலைவர் பாலசுப்பிரமணியன், மேலாளர்கள் முரளிதரன், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலை மனிதவள மேலாளர் சுதந்திரராஜ் வரவேற்றார். அம்பை டிஎஸ்பி கண்காணிப்பாளர் சுபாஷினி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இதில் நெல்லை வாசன் கண் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பங்கேற்று ஆலோசனை வழங்கினர். முகாமில் ஆலை தொழிலாளர்கள், வாகன ஓட்டுநர்கள், பள்ளி நிர்வாகிகள், ஊழியர்கள், ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பலனடைந்தனர். அம்பை மோட்டார் வாகன ஆய்வாளர் கனகவல்லி நன்றி கூறினார். ஏற்பாடுகளை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

Tags : Free Medical Camp ,
× RELATED உலக மகளிர் தினத்தையொட்டி சீஷா,...