×

நேதாஜி பிறந்த நாள் விழா

வள்ளியூர், ஜன. 24:  விடுதலை போராட்ட வீரர், நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 123வது பிறந்த நாள் விழா, வள்ளியூரில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு வள்ளியூர் வியாபாரிகள் சங்க தலைவர் சின்னதுரை தலைமை வகித்தார். தியாகிகளின் வாரிசுகளான ராஜ்குமார், ஜெஸ்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேமுதிக மாவட்ட துணை செயலாளர்  விஜிவேலாயுதம் வரவேற்றார். இதில் மகா கணபதி, பசுமதி மணி, வெள்ளப்பாண்டியன்,  பாஜ மாவட்ட பொதுச்செயலாளர்   தமிழ்செல்வன், நகர தலைவர் செல்வகுமார், திமுக நகர செயலாளர் சேதுராமலிங்கம், அமமுக மாவட்ட
தலைவர் ஊசிகாட்டான் சிவா, மணிகண்டன், முருகன், தொழிலதிபர் ராமமூர்த்தி, பசுமை இயக்கத் தலைவர் சித்திரை, ஆர்.எஸ்.பாண்டியன், பிரம்மகுமாரிகள் அமைப்பாளர் செல்வி, சுபாஷ் வாஞ்சிநாதன், மற்றும் ஆட்டோ ஒட்டுநர்கள், கார் ஓட்டுநர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். பாவூர்சத்திரத்தில் நடந்த விழாவில் முன்னாள் ராணுவ வீரர்கள் சீனிவாசகம், தமிழரசன், மாரியப்பன், குமார், ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சுபாஷ் சந்திர போஸ் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் சண்முகசுந்தரம், பிச்சையா, செல்வன், மகேஷ், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Netaji ,birthday party ,
× RELATED கொல்கத்தா விமான நிலைய ஓடுபாதையில் 2...