×

தூத்துக்குடி சிலுவைப்பட்டியில் நாளை மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

தூத்துக்குடி, ஜன.24: தூத்துக்குடி தெற்குமாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:திமுக சார்பில் ஆண்டுதோறும் ஜன.25ம்தேதி மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்தாண்டு மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தை எழுச்சியுடன் நடத்திட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில், மாப்பிள்ளையூரணி ஊராட்சி, சிலுவைப்பட்டி விலக்கில் நாளை 25ம்தேதி வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அருண்குமார் தலைமை வகிக்கிறார். தூத்துக்குடி ஒன்றிய தலைவர் வசுமதி அம்பாசங்கர் முன்னிலை வகிக்கிறார். மாப்பிள்ளையூரணி ஊராட்சி தலைவர் சரவணக்குமார் வரவேற்கிறார். இதில் திமுக நாடாளுமன்ற குழு துணைத்தலைவரும், மகளிரணி செயலாளருமான கனிமொழி எம்பி, மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

சண்முகையா எம்எல்ஏ, மாணவரணி மாநில துணைச் செயலாளர் உமரிசங்கர், தலைமை  பேச்சாளர் கரூர் மதி, கருணாகரன், சிவகாசி ஜீவா ஆகியோரும் மாநில மருத்துவரணி துணைச் செயலாளர் டாக்டர் வெற்றிவேல், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பூபதி, பிரம்மசக்தி, மாவட்ட நிர்வாகிகள், அருணாச்சலம், ராமநாதன், ஆறுமுகப்பெருமாள், பெல்சிபுளோரன்ஸ், முகம்மதுஅப்துல்காதர் ஆகியோரும் பேசுகின்றனர். கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள செயல்வீரர்கள், பொதுமக்கள், மற்றும் மாணவர்கள் திரளாக பங்கேற்க கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : gathering ,Tuticorin Crusader Tomorrow ,martyrdom martyrs ,
× RELATED மெஞ்ஞானபுரம் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் குடும்ப கூடுகை விழா