×

குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்காக கடும் குளிரிலும் காவல் துறையினர் ஒத்திகை


ஊட்டி,ஜன.24:நாடு முழுவதும் நாளை மறுநாள் குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. நீலகிரியில் நடைபெறும் போலீஸ் அணி வகுப்பிற்காக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் காவல்துறையினர் பயிற்சி மேற்கொண்டனர். ஆண்டுதோறும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று போலீசாரின் அணிவகுப்பு நடத்தப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை காவலர்கள் மட்டுமே கரு நீல நிற உடை அணிந்து இந்த அணிவகுப்பில் கலந்துகொள்வாளர்கள். ஊட்டியில் குளிர் அதிகமாக இருக்கும் என்பதால், இங்கு பணியாற்றும் காவலர்களுக்கு மட்டுமே இந்த ஆடை வழங்கப்படுகிறது. இவர்கள், சென்னையில் முதல்வர் கலந்துகொள்ளும் விழாவில், கூட இதே உடையில்தான் அணி வகுப்பில் கலந்துகொள்கின்றனர். இந்நிலையில், வரும் 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை, ஊர்காவல் படை, என்.சி.சி. மாணவர்கள் ஆகியோர் அணிவகுப்பு
பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தற்போது பனி பொழிவு அதிகம் காணப்படுவதால், கடும் குளிர் வாட்டுகிறது. எனினும், இதனை பொருட்படுத்தாமல் காவல்துறையினர் பயிற்சி மற்றும் அணி வகுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகளை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் மேற்கொண்டனர். போலீசாருடன் அணிவகுப்பில் ஈடுபடும் என்.சி.சி., மாணவ, மாணவிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களும் பயிற்சியில் பங்கேற்றனர்.

Tags : Police rehearsal ,celebration ,Republic Day ,
× RELATED திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்