×

நீலகிரியில் மனித நேய வார விழா இன்று துவங்கி 7 நாள் நடக்கிறது

ஊட்டி,ஜன.24:ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் மனித நேய வார விழா ஜனவரி 24ம் தேதி இன்று முதல் 30ம் தேதி நடைபெறவுள்ளது. இன்று மனித நேயம் தொடர்பான கண்காட்சி ஊட்டியில் பிரிக்ஸ் பள்ளியில் நடக்கிறது. நாளை (25ம் தேதி) அனைத்து மத தலைவர்களையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தலைவர்களையும், சான்றோர்களையும் ஒன்று கூட்டி நல்லிணக்க கூட்டங்கள் நடத்தப்படுகிறது. மேலும், வன்கொடுமை தடுப்புச்சட்ட கூறுகள் குறித்த கருத்தரங்கம் காவல்றை சமூக நீதி மற்றும் குடிமையில் உரிமைகள் பாதுகாப்பு பிரிவினரால் அழகர் மலையில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் நடத்தப்படுகிறது. நாளை மறுநாள் (26ம் தேதி) நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலமாக கல்லூரி மாணவ, மாணவியர், மருத்துவர் மற்றும் சுகாதாரம் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, அந்த குழு ஆதிதிராவிடர் கிராமங்களுக்கு சென்று அவர்கள் தயாரித்த தேநீர் அருந்தும் மனமகிழ் நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சி ஊட்டி அருகேயுள்ள ெபாக்காபுரம் தொட்டலிங்கி பழங்குடியினர் கிராமத்தில் நடக்கவுள்ளது.

27ம் தேதி மனித நேய தொடர்பான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, ஓவியப்போட்டிகள் ஊட்டியில் உள்ள பிரிக்ஸ் பள்ளி அரங்கில் நடக்கும். 28ம் தேதி மனித நேய தொடர்பான கலை நிகழ்ச்சிகள் குஞ்சப்பனை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியில் தொண்டு  நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படுகிறது. 29ம் தேதி தாட்கோ மூலம் ஆதி திராவிடர் மக்களுக்கு கடன் வழங்கும் முகாம் ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடக்கிறது.
30ம் தேதி மனித நேய வார விழா நிறைவு நாள் நிகழ்ச்சி ஊட்டி பழங்குடியினர் கலாசார மையத்தில் நடைபெறவுள்ளது. ஏழு நாட்கள் நடக்கும் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துக் கொள்ள வேண்டும், என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Tags : Humanitarian Week ,Nilgiris ,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...