×

சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, ஓவிய போட்டி

கோவை, ஜன.24:சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கோவையில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழகத்தில் போக்குவரத்துதுறை சார்பில் 31வது சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை  சாலை பாதுகாப்பு குறித்த பேரணிகள், ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை, மருத்துவ பரிசோதனைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், துண்டு பிரசுரம் விநியோகித்தல் ஆகியவை நடந்து வருகிறது. இதண் ஒரு பகுதியாக நேற்று கோவைபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, காரமடை அரசு பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகளில் பயிலும் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சாலைபாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியம், சொற்றொடர் வடிவமைத்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 1630 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பாஸ்கரன், குமரவேல், சரவணன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : sketch contest ,school students ,
× RELATED அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்-லைன்...