×

கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து அதிகரிப்பு

ஈரோடு, ஜன.24:  ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் கடந்த 3 வாரத்தைவிட இந்த வாரம் கூடுதலாக மாடுகள் வரத்தானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்ததோறும் புதன் மற்றும் வியாழக்கிழமை மாட்டு சந்தை கூடுகிறது. இதில், புதன்கிழமை வளர்ப்பு மாடுகளும், வியாழக்கிழமை கறவை மாடுகளும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், நேற்று வழக்கம் போல் சந்தை கூடியது. இந்த சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். உள்ளாட்சி தேர்தல், பொங்கல் பண்டிகை நிறைவடைந்ததால் கடந்த 3 வாரத்தை காட்டிலும் நேற்று அதிகளவில் மாடுகள் வரத்தானது.

இதில், பசு- 300, எருமை-200, கன்று-150 என 650 மாடுகள் வரத்தானது. இந்த மாடுகளை வாங்குவதற்காக தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்தனர். இதேபோல், தமிழக அரசின் விலையில்லா கறவை மாடுகள் திட்டத்தின்கீழ் மாடுகளை வாங்க மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் ஈரோடு சந்தையில் பயனாளிகளுக்கு 120 மாடுகளை வழங்கினர்.

Tags : Karungalpalayam ,
× RELATED சாலையை சீரமைக்க கோரிக்கை