×

எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பாலியல் புகாரில் ஜெராக்ஸ் கடைக்காரர் கைது எதிரொலி பள்ளி மாணவிகள் 7 பேர் நீதிமன்றத்தில் வாக்குமூலம்

மணப்பாறை, ஜன.24: ஜெராக்ஸ் கடை உரிமையாளர் மீது பாலியல் தொல்லை புகார் எதிரொலியாக பள்ளி மாணவிகள் 7 பேர் மணப்பாறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தனர்.
மணப்பாறை அருகே ேகாவில்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி எதிரே ஜெராக்ஸ் கடை வைத்திருந்தவர் சண்முகசுந்தரம்(40). இவர் ஜெராக்ஸ் எடுக்க வரும் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி தலைமையாசிரியர் தரன் அளித்த புகாரின் பேரில் மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கடந்த 16ம் தேதி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சண்முகசுந்தரத்தை கைது செய்தனர். இவரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க எஸ்பி., ஜியாவுல்ஹக் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். இந்நிலையில் நேற்று பள்ளி மாணவிகள் 7 பேர் மணப்பாறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜெராக்ஸ் கடையில் அதன் உரிமையாளர் சண்முகசுந்தரம் நடந்துகொண்ட விதம் குறித்து வாக்குமூலம் அளித்தனர். பொதுத்துறை நிறுவனமான ரயில்வே நிர்வாகத்தின் கீழ் இருந்து நாடு முழுவதும் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் இயங்கி வந்த ரயில்களை தனி யாருக்கு தாரை வார்க்க மத்திய அரசின் துணையோடு ரயில்வே அமைச்சகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

அதில் ஒரு பகுதியாக ரயில்வே அமைச்சகம் அடுத்த 15 தினங்களில் 100 ரயில்களை தனியாருக்கு ஏலம் விட இருக்கிறது. தனியார் ரயில்களுக்கான செயல் திட்டத்தை நிதி ஆயோக் சிஇஓ கடந்த ஜனவரி 7ம் தேதி வெளியிட்டிருந்தார். அதன் மீது தனியார் முதலீட்டாளர்கள் கருத்து தெரிவிக்க விதிக்கப்பட்டிருந்த கெடு நேற்றுடன் முடிவடைந்து விட்டது. அடுத்த கட்டமாக ரயில்கள் ஏலம் துவங்க உள்ள சூழலில் தனியார் ரயில்களின் வருகை அரசு ரயில்களையும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களையும் கடுமையாக பாதிக்கும் என்பதால் ரயில்வே அமைச்சகத்தின் தனியார் மயம் முடிவிற்கு தொழிற்சங்கங்களும், ஊழியர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் மயமாக்கப்படும் ரயில்களால் அரசு ரயிலுக்கு எந்த விதமான பாதிப்புகள் ஏற்படும், ரயில்வே அமைச்சகம் தனியாருக்கு எந்த விதமான சலுகைகளை வழங்குகிறது, இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பது குறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியனின் மாநில துணை பொதுச் செயலாளர் மனோகரன் கூறியதாவது:

புதுடெல்லியை இணைக்கும் 35 ரயில்கள், மும்பையை இணைக்கும் 26 ரயில் கள், கொல்கத்தாவை இணைக்கும் 12 ரயில்கள், சென்னையை இணைக்கும் 11 ரயில்கள், பெங்களூருவை இணைக்கும் 8 ரயில்கள், கவுகாத்தியை இணைக்கும் 2 ரயில்கள், லக்னோவை இணைக்கும் 2 ரயில்கள் ஜெய்ப்பூர், புனே, திருப்பதி, பாட்னா என முக்கிய ஊர்களை இணைக்கும் ரயில்களில் தலா ஒன்று என மொத்தம் 100 ரயில்கள் முதற்கட்டமாக ஏலம் விடப்பட இருக்கிறது.இதற்காக மத்திய நிதியமைச்சகத்தின் பொது தனியார் பங்களிப்பு மதீப்பிட்டு குழு கொள்கை ஒப்புதல் தந்தது. இதையடுத்து, நிதி ஆயோக் சிஇஒ அமிதாப் காந்த் தலைமையில் செயலாளர்கள் மட்டத்தில் அதிகாரக் குழு உருவாக்கப் பட்டது. தனியார் ரயில்களுக்கான வரைவு திட்டத்தை கடந்த ஜனவரி 7 ம் தேதி இக்குழு வெளியிட்டது. அதில் ஏலத்தில் பங்கு பெற இருக்கும் முதலாளிகளிடம் 15 நாட்கள் கெடு விதித்து கருத்து கேட்டு இருக்கிறது.மூன்று அல்ல நான்கு பெரும் நிறுவனங்கள் இந்திய ரயில்வே பாதைகளில் தனியார் ரயில்கள் இயக்க முன் வரும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த ஏலத்தின் மூலம் ரூ.22 ஆயிரத்து 500 கோடி திரட்டுவது ரயில்வே அமைச்சகத்தின் இலக்கு. முதலீட்டாளர்களை ஈர்த்து ஏலப் போட்டி அவர்களுக்கு மத்தியில் சூடுபிடித்தால் மட்டுமே இந்த இலக்கு சாத்தியம்.

இதனால் தனியார் ரயில் புறப்படும் நேரத்திற்கு 30 நிமிடம் முன்னதாகவோ அல்லது 30 நிமிடம் பின்னதாகவோ வேறு எந்த ரயிலும் அந்த மார்க்கத்தில் இயக்கப்பட மாட்டாது. தனியார் ரயில் இயக்க 35 ஆண்டுகளுக்கு அனுமதி. அரசு ரயில்கள் வழங்கி வரும் கட்டணச் சலுகை பொருந்தாது, கட்டண நிர்ணய உரிமை, ஊழியர்கள் நியமன உரிமை, பிரேத்யேக பராமரிப்பு அனுமதி, பயணச் சீட்டு விற்பனை அனுமதி, 15 நிமிடம் வரை காலதாமதமாக ரயில்கள் இயக்குவது அபராதத்திற்கு உட்படாது, பெட்டிகள், என்ஜின்கள், கொள் முதல் சுதந்திரம், அதில் விளம்பர அனுமதி வழங்கி என வரைவுத் திட்டத் தில் நிதி அயோக் தாராளம் காட்டி இருக்கிறது. முதலீட்டாளர்களுக்கு முற்றி லும் சாதகமாக தீட்டப்பட்டு உள்ளது.தனியார் ரயில்கள் புறப்படும் நேரம், சென்றடையும் நேரத்தில் முன்னுரிமை பெறும். தனியார் ரயில்களுக்காக அரசு ரயில்கள் வழியில் ஓரங்கட்டப்பட வாய்ப்பு அதிகம். தனியார் ரயில்கள் ரயில் நிலையங்கள் சென்றடையும் நேரத்திற்கு ஏற்ப வேகத்தை கூட்ட குறைக்க வாய்ப்பு அதிகம். வர்த்தக போட்டி தனியார் ரயில்களுக்கு இடையே மட்டுமே உருவாக வாய் ப்பு அதிகம். அதே நேரம் அரசு ரயில்கள் கையறு நிலையில் வர்த்தகப் போட் டியில் இருந்து விலகி நிற்கும் நிலை உருவாகும். தனியார் ரயில்கள் வரை வுத் திட்டம் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக தீட்டப்பட்டு இருக்கிறது. எனவே அரசு ரயில்களை நசுக்க வழிவகை செய்யும் தனியார் ரயில் திட்டத் தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு மனோகரன் கூறினார்.

Tags : shoplifter ,Xerox ,arrest echo schoolgirls ,court ,
× RELATED அக்கரையில் உள்ள பல கோடி மதிப்புள்ள...